இன்று காலை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: தவெக-வோடு அமைச்சரவையில் இணையும் காங்கிரஸ்
செய்தி முன்னோட்டம்
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று காலை 10 மணிக்கு முதன்முறையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கடந்த 10-ஆம் தேதி முதல்வருடன் சேர்த்து 10 பேர் மட்டுமே பொறுப்பேற்றிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை லோக் பவனில் (ஆளுநர் மாளிகை) நடைபெறும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் புதிய அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். இந்த விரிவாக்கத்தின் மூலம் தமிழக அமைச்சரவையின் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற உள்ள 23 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது ஆளுநர் மாளிகை!#SunNews | #CMVijay | #TNCabinet pic.twitter.com/O9fi02yiSj
— Sun News (@sunnewstamil) May 21, 2026
பட்டியல்
தவெக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பட்டியல்
இன்று பதவியேற்க உள்ள 23 பேரில் 21 பேர் தமிழக வெற்றிக் கழகத்தையும் (தவெக), 2 பேர் கூட்டணி கட்சியான காங்கிரஸையும் சேர்ந்தவர்கள் ஆவர். ஸ்ரீநாத்- தூத்துக்குடி- தவெக கமலி-அவிநாசி- தவெக சி. விஜயலட்சுமி- குமாரபாளையம்- தவெக ரஞ்சித் குமார்- காஞ்சிபுரம்-தவெக வினோத்- கும்பகோணம்- தவெக ஜெகதீஷ்வரி- ராஜபாளையம்- தவெக, உள்ளிட்ட 21 பேரும்; ராஜேஷ் குமார் -கிள்ளியூர்- காங்கிரஸ் விஸ்வநாதன்-மேலூர்- காங்கிரஸ் உள்ளிட்ட 2 காங்கிரஸ் கட்சினரும் பதவியேற்கவுள்ளனர். இதன்மூலம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தமிழக ஆளுங்கட்சியில் அமைச்சரவை அந்தஸ்தைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், காலியாக உள்ள முக்கிய இலாக்காக்களின் பணிகள் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.