தமிழக பட்ஜெட் 2023: விவேகமான நிதி நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும்
நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன்(PTR) தரவு அடிப்படையிலான நிர்வாகத்திற்கு அடிக்கடி வலியுறுத்துவதனால், தமிழக பட்ஜெட், விவேகமான நிதி நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளிக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால் எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு ஆளான போதிலும், அந்த அழுத்தத்தை ஸ்டாலின் தனது நிதியமைச்சருக்கு வெளிப்படையாகக் கொடுக்கவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஸ்டாலின், பட்ஜெட்டில் பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவியாக 1,000 ரூபாய் வழங்குவதற்கான அட்டவணை குறிப்பிடப்படும் என்று கூறினார். "முதல்வர் ஸ்டாலினின் இடைவிடாத ஆதரவாலும், பலரது முயற்சியாலும், முன்னெப்போதும் இல்லாத அளவு சீர்திருத்தங்கள் மூலம் தமிழகத்தின் நிதி நிலைமையை பெரிதும் மேம்படுத்தியுள்ளோம். இது எனக்கு கிடைத்த மிகவும் திருப்திகரமான வேலையாகும்" என்று PTR ட்விட்டரில் கூறியிருந்தார்.
கடந்த மார்ச் மாத பட்ஜெட்டின் மதிப்பீடுகள்
கடந்த மார்ச் மாத பட்ஜெட்டில், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் தமிழகத்தின் GSDP 24,84,807 கோடியைத் தொடும் என்று PTR கணித்திருந்தார். இது 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட GSDP மதிப்பான 21,79, 655 கோடியை விட 14% வளர்ச்சியாகும். 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் சுமார் 3 லட்சம் கோடியை விட 11% அதிகரிக்கும் என்றும், 2022-23 ஆம் ஆண்டில் மாநிலத்தின் ஆண்டுச் செலவு 3.33 லட்சம் கோடிக்கு சற்று அதிகமாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். 2022-23ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 90,000 கோடி குறைவாக இருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2021-22 இல், திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, நிதிப் பற்றாக்குறை GSDP-யில் 3.8% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.