LOADING...
நவம்பர் 4ஆம் தேதி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
நவம்பர் 4ஆம் தேதி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்

நவம்பர் 4ஆம் தேதி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 25, 2025
02:20 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வரும் நவம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், மாணவர்கள் அரையாண்டுத் தேர்வுக்குத் தயாராகி வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையில், நடப்பு கல்வியாண்டில் இருந்து 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், 2025-26 ஆம் ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

தாமதம்

தேர்வு அட்டவணை வெளியிடுவதில் தாமதம்

கடந்த ஆண்டைப் போலவே பொதுத் தேர்வு அட்டவணை அக்டோபர் மாதத்திலேயே வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தீபாவளிப் பண்டிகை, தொடர் மழை மற்றும் சட்டமன்றக் கூட்டத்தொடர் போன்ற காரணங்களால் அட்டவணை தயாரிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நவம்பர் 4 ஆம் தேதி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுடனும் ஆலோசனை நடத்திய பிறகு, 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த அட்டவணையில், பாடம் வாரியாகத் தேர்வு நடைபெறும் தேதி, செய்முறைத் தேர்வுக்கான தேதிகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் குறித்த முழு விவரங்களும் இடம்பெறும்.