தி.நகரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான பிரமாண்ட நடைமேடை
சென்னையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாக திகழும் தி.நகருக்கு வருபவர்கள் மாம்பலம் ரயில்நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்துநிலையத்திற்கோ அல்லது பேருந்துநிலையத்தில் இருந்து ரயில்நிலையத்திற்கோ செல்வது அவவ்ளவு எளிதல்ல. பாண்டிபஜார், பனகல்பார்க் போன்ற பரபரப்பான பகுதிகளுக்கு வருவோரும் இதேவழியில் தான் வரவேண்டும். இந்த கூட்ட நெரிசலினை தவிர்க்கவே தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக மாம்பலம் ரயில்நிலையம் வரை 13அடி அகலத்தில் 1,968அடி நீளத்திற்கு சுமார் 30கோடி செலவில் பிரம்மாண்ட நடைமேடையானது கட்டப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டுவர இன்று(மே.,16)தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்துவைக்கிறார். உலகளவில் மிக நீளமான நடைமேடையாக இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள இதில், பல்வேறு வர்ணங்கள் பூசப்பட்டதுடன், தமிழக கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.