Loading...
இந்தியாவின் சிறந்த தூய்மையான காற்றுள்ள நகரங்கள் பட்டியல் வெளியீடு: லக்னோ முதலிடம்; சென்னை எந்த இடம்?
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோ முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது

இந்தியாவின் சிறந்த தூய்மையான காற்றுள்ள நகரங்கள் பட்டியல் வெளியீடு: லக்னோ முதலிடம்; சென்னை எந்த இடம்?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 08, 2026
04:59 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் வெளியிடப்பட்ட 2026-ஆம் ஆண்டிற்கான 'ஸ்வச் வாயு சர்வேக்ஷன்' காற்று தூய்மைத் தரவரிசை பட்டியலில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோ முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. குப்பை சேகரிப்புக்கு மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியது, சாலை தூசிகளை கட்டுப்படுத்த இயந்திர துடைப்பான்களை பயன்படுத்தியது மற்றும் பழைய கழிவுகளைமுறையாக மேலாண்மை செய்தது போன்ற சிறப்பான செயல்பாடுகளுக்காக லக்னோவிற்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தூர் இரண்டாம் இடத்தையும், ஜபல்பூர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. டெல்லி 30-வது இடத்தையும், மும்பை 37-வது இடத்தையும் பிடித்துள்ள நிலையில் சென்னை, கொல்கத்தா, மதுரை ஆகியவை கடைசி ஐந்து இடங்களுக்குள் தள்ளப்பட்டுள்ளன.

தரவரிசை

பிற மக்கள் தொகைப் பிரிவுகளின் தரவரிசை

3 முதல் 10 லட்சம் மக்கள் தொகை பிரிவில், ஒடிசாவின் ரூர்கேலா முதலிடத்தையும், பிரோசாபாத் மற்றும் குண்டூர் இணைந்து இரண்டாம் இடத்தையும், அமராவதி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

3 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை பிரிவில் கலிங்கா நகர் முதலிடத்தையும், அங்குல் இரண்டாம் இடத்தையும், தால்சர் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றியுள்ளன.

தேசியக் தூய்மைக் காற்றுத் திட்டத்தின் (NCAP) கீழ் சேர்க்கப்பட்டுள்ள 130 நகரங்களில், வெறும் 14 நகரங்கள் மட்டுமே 2019 முதல் 2026 வரையிலான முதல் இலக்கு காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட தேசியக் காற்றுத் தரக் கட்டுப்பாட்டு அளவீடுகளை எட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT