Page Loader
நடிகர் சந்தீப் கிஷனுக்கு சொந்தமான உணவகத்தில் உணவு பாதுகாப்பு விதிமீறல் இருப்பது கண்டுபிடிப்பு
இதன் கிளை சென்னையிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் சந்தீப் கிஷனுக்கு சொந்தமான உணவகத்தில் உணவு பாதுகாப்பு விதிமீறல் இருப்பது கண்டுபிடிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 11, 2024
02:44 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனுக்குச் சொந்தமான உணவகம் தெலங்கானாவின் பிரபலமான 'விவாஹா போஜனம்பு'. இதன் கிளை சென்னையிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தெலங்கானாவில் உள்ள உணவகத்தின் கிளையொன்றில் பல உணவுப் பாதுகாப்பு மீறல்கள் இருப்பதாக உணவுப் பாதுகாப்பு ஆணையர் பணிக்குழு கண்டறிந்துள்ளது. ஜூலை 8-ம் தேதி நடத்தப்பட்ட ஆய்வில், இந்த உணவகத்தில் காலாவதியான அரிசி மற்றும் தேங்காய் துருவலில் செயற்கை உணவு வண்ணம் பூசப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அரைவேக்காடாக சமைத்த உணவுகள் மற்றும் மூலப்பொருட்களுக்கான முறையற்ற சேமிப்பு மற்றும் லேபிளிங் நடைமுறைகளையும் குழு கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது.

உடல்நலக் கவலைகள்

உணவகத்தில் கூடுதல் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன

அறிக்கைகளின்படி, ஸ்டீல் பாத்திரங்களில் சேமிக்கப்பட்ட அரைவேக்காடாக-சமைத்த உணவுகள் மற்றும் மூலப்பொருட்கள் மூடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தேவையான லேபிளிங் இல்லை, குறிப்பாக சில குப்பைத் தொட்டிகளில் மூடி இல்லை. மேலும், ஆய்வின் போது சமையல் அறைக்குள் வாய்க்கால் தண்ணீர் தேங்கி இருப்பது கண்டறியப்பட்டது. உணவகத்தில் உணவு கையாளுபவர்களுக்கு மருத்துவ தகுதிச் சான்றிதழையோ அல்லது சமையலில் பயன்படுத்தப்படும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் "பபிள் வாட்டர்" க்கான நீர் பகுப்பாய்வு அறிக்கையையோ உணவகம் வழங்கத் தவறிவிட்டது எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விவாஹ போஜனம்பு, உணவு கையாளுபவர்கள் ஹேர்நெட் மற்றும் சீருடைகள் போன்ற தேவையான சில நடைமுறைகளை மட்டுமே பின்பற்றுவதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

உணவு பாதுகாப்பு விதிமீறல்

பதில்

சந்தீப்பின் பதில்

இருப்பினும், சந்தீப் கிஷன் ட்விட்டரில் சில விஷயங்களை தெளிவுபடுத்தினார். "மிகைப்படுத்தப்பட்ட உடனடி தலைப்புகள் கலாச்சாரத்தை" பரப்புவதற்கு முன், உண்மைகளை சரிபார்க்க எனது அன்பான புரவலர்களைக் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் #VivahaBhojanambu குழுவாக 8 ஆண்டுகளாக எங்கள் உணவு மற்றும் நேர்மையுடன் ஒரு விசுவாசமான வாடிக்கையாளர்களை உருவாக்கி இருக்கிறோம், உங்கள் அன்பை நாங்கள் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" என்றார். அதோடு விதிமீறல் என குறிப்பிடப்பட்டவைகளை மறுத்து ஆதாரங்களுடன் வெளியிட்டார். கண்டுபிடிக்கப்பட்ட காலாவதியான அரிசி மூட்டை பற்றி, அது அவர்களின் விற்பனையாளரிடமிருந்து சீல் செய்யப்பட்ட மாதிரி என்றும் கூறியுள்ளார். சமூக ஊடகங்களில் பரவும் அனைத்து படங்களும் உணவகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

சந்தீப்பின் பதில்