Page Loader
மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல்
மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல்

மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல்

எழுதியவர் Nivetha P
Feb 09, 2023
08:31 am

செய்தி முன்னோட்டம்

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடல் வழி மார்க்கமாக தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில், அந்த அதிகாரிகள் தமிழக கடலோர காவல் படையினருக்கும், இந்திய கடற்படையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் இருந்தே தமிழக கடலோர எல்லை மற்றும் சர்வதேச கடல் எல்லையில் இருந்து இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இலங்கையில் இருந்து தமிழகம் நோக்கி வந்த ஓர் நாட்டு படகினை அதிகாரிகள் நிறுத்த முயன்றனர். அந்த படகு நிற்காமல் சென்றதால் அதனை பிடிக்க அதிகாரிகள் முயன்றனர்.

கடலோர காவல்படை விசாரணை

கடலில் தூக்கி வீசப்பட்டது தங்கக்கட்டிகள் என தகவல்

ஆனால் அந்த படகு நிற்காமல் சென்றதால் அதனை பிடிக்க அதிகாரிகள் முயன்றனர். அப்பொழுது அந்த நாட்டுபடகில் இருந்த மூன்று பேர் மர்மமான மூட்டை ஒன்றினை கடலில் வீசிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து அந்த படகை பிடித்த அதிகாரிகள் அதில் இருந்தோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால் அவர்கள் கடலில் வீசியது தங்கமா அல்லது போதை பொருட்களா என்பதை கண்டறிய கடலோர காவல்படை போலீசார் கடலில் தீவிரதேடுதல் வேட்டையை நடத்திவருகிறது. சிலிண்டர்களை பொருத்திகொண்டு ஆழ்கடலில் மூழ்கிதேடும் நபர்களை கொண்டு தேடுதல்பணி நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே படகிலிருந்த மூன்றுபேரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், கடலில் எரிந்தது தங்கக்கட்டிகள் என்பதையும் அவர்கள் கூறியுள்ளார்கள்.