டெங்கு பரவல் - தகவல் அளிக்காத மருத்துவர்களுக்கு அபராதம் விதிப்பு
தமிழ்நாடு முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்கள், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகரிக்கிறது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அதிகளவில் சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சு திணறல் போன்ற நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வருகிறார்கள். இதனிடையே தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக கூறப்படும் நிலையில், சுகாதாரத் துறை பல அதிரடியான தடுப்புநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், தற்போது தங்கள் மருத்துவமனைகளுக்கு வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்புடைய நோயாளிகளின் விவரங்களை மருத்துவர்கள் பொது சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு தெரிவிக்க தவறினால் சட்ட விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.