விமானிகளின் ஊதியத்தை உயர்த்திய ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்!
இந்தியாவில் தங்கள் நிறுவனம் விமான சேவையைத் தொடங்கி 18 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, தங்கள் விமானிகளுக்கு ஊதிய உயர்வை அறிவித்திருக்கிறது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம். அதன்படி, மாதத்திற்கு 75 மணி நேரம் விமானத்தை இயக்கும் கேப்டன்களின் சம்பளத்தை மாதத்திற்கு ரூ.7.5 லட்சமாக உயர்த்தியிருக்கிறது ஸ்பைஸ்ஜெட். மேலும், அந்நிறுவனத்தின் பயிற்சியாளர்கள் மற்றும் முதல் அதிகாரிகளின் சம்பளங்களையும் அந்நிறுவனம் உயர்த்தியிருப்பதாக அறிவித்திருக்கிறது. செயல்பாட்டில் இல்லாத ஸ்பைஸ்ஜெட் விமானங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர புதிய திட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாக முன்னர் தெரிவித்திருந்தார் அந்நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங். தற்போது இந்தியாவிற்குள்ளும், வெளிநாடுகளுக்கும் 48 வழித்தடங்களில் 250 விமானங்களை இயக்கி வருகிறது ஸ்பைஸ்ஜெட். போயிங் 737 மேக்ஸ், போயிங் 700 மற்றும் Q400 ஆகிய விமானங்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.