
பிரம்மாண்டமான அயோத்தி ராமர் கோவிலுக்கு உள்ளிருந்த எடுக்கப்பட்ட முதல் வீடியோ
செய்தி முன்னோட்டம்
அயோத்தி ராமர் கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேகத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் விழாவிற்கு அயோத்தி தயாராகி வருகிறது.
இந்நிலையில், டிடி நியூஸ், அயோத்தி ராமர் கோவிலின் உள் தோற்றங்களை படமெடுத்து காட்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
திறப்பு விழாவிற்காக பிரமாண்ட ஒளிவிளக்குகள் மற்றும் மலர்களால் ராமர் கோவில் அலங்கரிக்கப்பட்டிருப்பதை டிடி நியூஸின் வீடியோ காட்டுகிறது.
ஜனவரி 22 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடங்கும்.
ராமர் சிலை பிரதிஷ்டைக்காக ஒரு வாரமாக நடந்து வரும் சடங்குகள் கும்பாபிஷேகத்துடன் நிறைவடையும்.
விழாவின் முக்கிய சடங்குகளை லட்சுமிகாந்த் தீட்சித் தலைமையிலான அர்ச்சகர்கள் குழுவினர் செய்வார்கள்.
ட்விட்டர் அஞ்சல்
அயோத்தி ராமர் கோவிலின் உள் தோற்றம்
#DDNews Exclusive sneak peek inside the magnificent Ram Temple!
— DD News (@DDNewslive) January 20, 2024
The craftsmanship is awe-inspiring, a testament to India's rich cultural heritage. @PMOIndia @ShriRamTeerth @UPGovt @tourismgoi @MinOfCultureGoI @tapasjournalist#Ayodhya #AyodhyaRamTemple #RamTemple… pic.twitter.com/FyaMm4FGrv