NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு 
    சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

    சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு 

    எழுதியவர் Nivetha P
    May 23, 2023
    12:54 pm

    செய்தி முன்னோட்டம்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியினை சேர்ந்த கடற்கரை என்பவர் காளையார்குறிச்சி, ஊராம்பட்டி என்னும் கிராமத்தில் சொந்தமாக ஒரு பட்டாசு ஆலையினை நடத்தி வருகிறார்.

    20க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த ஆலையில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்துள்ளனர்.

    இந்நிலையில் இந்த ஆலையில் கடந்த 18ம்தேதி தொழிலாளர்கள் அனைவரும் பணியில் ஈடுபட்டிருந்தப்பொழுது, அதிக வெப்பம் காரணமாக மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீ பற்றியுள்ளது.

    கண் இமைக்கும் நேரத்தில் அந்த தீயானது அங்கிருந்த பட்டாசுகளில் பட்டு பயங்கர சத்தத்துடன் வெடிக்க துவங்கியது.

    இந்த விபத்தில் ஒரே அறையில் பணியாற்றி கொண்டிருந்த இருளாயி(48), குமரேசன்(30), அய்யம்மாள்(54), சுந்தர்ராஜ்(27) ஆகியோர் உடல் கருகி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    மீட்பு

    ஆலையின் மேற்பார்வையாளர் கைது 

    இது குறித்து தகவலறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மேலும் விபத்தில் சிக்கிய 4 பேரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்ததாக தெரிகிறது.

    எனினும் மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்திலேயே அய்யம்மாள்(54), குமரேசன்(30) மற்றும் சுந்தர்ராஜ்(27) உள்ளிட்ட 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இருளாயி(48) மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து மாரனேரி காவல்துறை விசாரித்ததையடுத்து, விபத்து நடந்த ஆலையின் உரிமையாளர் மாடசாமி, போர்மேன் முத்துக்கருப்பன் மற்றும் மேலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

    இதனை தொடர்ந்து, ஆலையின் மேற்பார்வையாளர் காளியப்பன்(40) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விருதுநகர்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள் மாவட்ட செய்திகள்
    சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று நீரிழிவு நோய்
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது தமிழ்நாடு
    மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை  தமிழ்நாடு

    காவல்துறை

    வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இந்தியா
    சென்னை தாம்பரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து  சென்னை
    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெருகும் ஆதரவு; ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #DisRespectOfARRahman ஏஆர் ரஹ்மான்
    நடிகர் ஆர்.கே சுரேஷ் வங்கி கணக்கை முடக்கிய குற்றப்பிரிவு போலீசார்!  தமிழ்நாடு

    காவல்துறை

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை  கோவை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மேலும் 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு  சிபிசிஐடி
    மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் போலீஸ் வன்முறை நடந்ததாக குற்றச்சாட்டு  இந்தியா
    வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025