சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகர்-6 ஆண்டு சிறை
சிங்கப்பூர் சவுத்பிரிட்ஜ் ரோடு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீமாரியம்மன் கோயில். இதன் தலைமை அர்ச்சகராக கந்தசாமி சேனாதிபதி கடந்த 2018ம்ஆண்டு முதல் பணியாற்ற துவங்கியுள்ளார். 2014ம்ஆண்டு முதலே சிங்கப்பூர் மதிப்பிற்கு 1.1.,மில்லியன் வெள்ளி மதிக்கத்தக்க 255தங்கநகைகள் சேனாதிபதி பொறுப்பில் கோயில் நிர்வாகம் கொடுத்துள்ளது. இந்த நகைகள் முக்கியமான நாட்களில் மட்டுமே தெய்வங்களுக்கு போடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2016ம்ஆண்டு முதல் 2020வரை 172க்கும்மேற்பட்ட முறை 66தங்கநகைகளை அடமானம் வைத்து கிட்டத்தட்ட ரூ.14.2கோடி பணத்தினை பெற்றுள்ளார். கோயில் நிர்வாகம் தணிக்கை செய்யும்போது நகைகளைமீட்டு கோயிலில் வைத்து கணக்கு காண்பிப்பதை சேனாதிபதி வழக்கமாக கொண்டுள்ளார். இதுகுறித்து கோயில் நிர்வாகத்திற்கு தெரியவந்தநிலையில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இவர்மீது கடந்த 29ம்தேதி புகாரளித்தநிலையில், தற்போது அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.