NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சேது சமுத்திர திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
    இந்தியா

    சேது சமுத்திர திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

    சேது சமுத்திர திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
    எழுதியவர் Nivetha P
    Jan 13, 2023, 05:44 pm 1 நிமிட வாசிப்பு
    சேது சமுத்திர திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
    சேது சமுத்திர திட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றம்

    சேது சமுத்திரதிட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுபெறச்செய்ய மிக முக்கியமான திட்டமாக சேது சமுத்திர திட்டம் விளங்குகிறது" என்று கூறினார். 1860ம் ஆண்டு 50லட்சம் ரூபாயில் 'கமேண்டர் டைலர்' என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் தான் சேது சமுத்திர திட்டம் ஆகும். அதன்பின்னர் 1955ல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ராமசாமி முதலியார் குழு துவங்கி, 1963,1964ல் என பல்வேறு பொறியியல் வல்லுநர்களால் பல்வேறு ஆண்டுகளாக ஆராய்ந்து இத்திட்டமானது வடிவமைக்கப்பட்டது. பின்னர் 2004ம்ஆண்டு ரூ.2,427கோடியில் இத்திட்டத்தை செயல்படுத்த அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்'ஆல் அனுமதி வழங்கப்பட்டது. 2005ம்ஆண்டு துவங்கப்பட்டு இதன் பணிகள் நடந்துகொண்டிருக்கையில் இத்திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

    மத்திய அரசு முன்வர கோரும் தமிழக அரசு - நிபந்தனைகளோடு தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த கட்சியினர்

    இதனை தொடர்ந்து, சேது சமுத்திர திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருந்தால் தமிழகத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது போல் அமையும். எனவே, தாமதமின்றி சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு முன்வரவேண்டும். இதனை முறையாக செயல்படுத்த தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என பேரவை ஒருமனதாக தீர்மானிக்கிறது என்று தமிழக முதல்வர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, மீனவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று அதிமுக'வும், திட்டத்தை மறுஆய்வு செய்யவேண்டும் என்று பாஜக'வும் நிபந்தனைகள் விதித்து தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது. இதற்கு பாஜக, காங்கிரஸ், விசிக போன்ற மற்ற கட்சிகளும் ஒப்புக்கொண்ட நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது என்று பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு
    மு.க.ஸ்டாலின்

    சமீபத்திய

    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு இளையராஜா
    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு இந்தியா

    மு.க ஸ்டாலின்

    தமிழகத்தில் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது
    தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல் தமிழ்நாடு
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது விருதுநகர்

    தமிழ்நாடு

    கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் கோவை
    தமிழக அரசின் ஆணையால், டபுள் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் மோகன் ராம் வைரல் செய்தி
    திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம் மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை

    மு.க.ஸ்டாலின்

    ஆளுநர்களுக்கு வாய் மட்டுமே உள்ளது காதுகள் இல்லை - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு
    தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ் பாமக
    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு தமிழ்நாடு
    ஈரோடு இடைத்தேர்தல் - வரும் 24ம் தேதி பிரச்சாரத்தில் களமிறங்குகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023