
டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுகளுக்கு தடை இல்லை - செந்தில் பாலாஜி விளக்கம்
செய்தி முன்னோட்டம்
இந்தியா முழுவதும் செப்டம்பர் 30ம்தேதிக்கு மேல் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதற்குள் பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.2000நோட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் இனி வழங்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
வங்கிகளில் நோட்டுகளை மாற்றுகையில், ஒரேநேரத்தில் அதிகபட்சம் ரூ.20,000வரை வங்கியில் வரவு வைத்துக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ்வங்கி கூறியுள்ளது.
இதனைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் ரூ.2000நோட்டுகளை வாங்கக்கூடாது,
அதையும் மீறி வாங்கினால் அதற்கு குறிப்பிட்ட டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரே பொறுப்பு என்று டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல்கள் பரவியது.
இந்நிலையில் இது முற்றிலும் தவறான செய்தி, இதுபோல எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
முற்றிலும் தவறான செய்தி..
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) May 20, 2023
இது போல எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை.. https://t.co/g17PdyyWLz