தொழிலதிபர் சேகர் ரெட்டி மகளுக்கு நிச்சயித்த மாப்பிள்ளை மாரடைப்பு காரணமாக மரணம்-அதிர்ச்சியில் குடும்பத்தார்
பிரபல தொழிலதிபரும், திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் இருந்து வருபவர் சேகர் ரெட்டி. இவரது மகளுக்கும் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியின் மகன் சந்திர மவுலிக்கும் திருமணம் செய்வதாக சமீபத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் வரும் ஜனவரி 26ம் தேதி அன்று நடைபெறவிருந்த திருமணத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நடத்தி வைப்பதாக இருந்தது. இந்நிலையில் சென்னையில் நண்பர்களுக்கு பத்திரிக்கை வைக்கும் பணியில் இருந்த மாப்பிள்ளை சந்திர மவுலி நேற்று முன்தினம் திடிரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த சந்திர மவுலி
இதனையடுத்து அவரை உடனடியாக உறவினர்கள் சென்னை காவிரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சந்திர மவுலி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்த சந்திர மவுலி தனது கண்களை தானமாக அளித்துள்ளார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் மாப்பிள்ளை இப்படி திடீர் மரணம் அடைந்தது சேகர் ரெட்டி குடும்பத்தை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.