Page Loader
சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் குறித்து சென்னை காவல்துறை விளக்கம் 
சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் குறித்து சென்னை காவல்துறை விளக்கம்

சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் குறித்து சென்னை காவல்துறை விளக்கம் 

எழுதியவர் Nivetha P
Jun 01, 2023
03:48 pm

செய்தி முன்னோட்டம்

நாம் தமிழர் கட்சித்தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே17இயக்கத்தினை சேர்ந்த திருமுருகன்காந்தி ஆகியோரது ட்விட்டர் கணக்குகள் நேற்று(மே.,31)திடீரென முடக்கப்பட்டது. சட்டபூர்வ கோரிக்கையினை ஏற்று இவர்களது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் பக்க தகவல்கள் தெரிவிக்கிறது. இதனைத்தொடர்ந்து, சீமானின் ட்விட்டர் கணக்கினை முடக்க சென்னை காவல்துறை சிபாரிசு செய்ததாக இணையத்தில் செய்திகள் பரவியது. இந்நிலையில், சீமான் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோரது ட்விட்டர் கணக்கினை முடக்க எவ்வித பரிந்துரையும் செய்யவில்லை என்று சென்னை காவல்துறை விளக்கமளித்துள்ளது. மேலும் சீமானின் கணக்கினை முடக்கியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், "கருத்துக்களை கருத்துக்கள் கொண்டு எதிர்கொள்வதே அறம்". "கழுத்தினை நெரிப்பது அல்ல.சமூகவலைத்தளத்தினை அதன் தரத்துடன் செயல்பட ட்விட்டர் முடக்கம் நீக்கப்படவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

சென்னை காவல்துறை விளக்கம்