உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை திங்கட்கிழமை (செப்டம்பர் 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோயம்புத்தூர் மாவட்டம்:
பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், பல்லபாளையம் இ.பி. அலுவலகம், கரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர், காமாட்சிபுரம், அய்யர்பாடி, வால்பாறை, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்ஃபால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லார், பெரியகல்லார், ஹைஃபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி, காடம்பாறை, தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், பாண்டியன்கரடு, ஏரிசநம்பட்டி, வல்லகுண்டாபுரம், எஸ்.நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம், தீபாலபட்டி, மேட்டுப்பாளையம்.
தஞ்சாவூர் மாவட்டம்:
அதிராம்பட்டினம், ராஜாமடம் பகுதிகள் முழுவதும்.
பெரம்பலூர் மாவட்டம்:
பரவை, கீழமாத்தூர், ஓலைப்பாடி, ஏழூர், மங்களமேடு, சின்னார், எறையூர், முருக்கன்குடி, வாலிகண்டபுரம், சர்க்கரை ஆலை பகுதி.
சிவகங்கை மாவட்டம்:
திருமாந்துரை, பெருமத்தூர், வடக்கலூர், அத்தியூர் பகுதிகள் முழுவதும்.