நாளை (ஜூலை 9) தமிழகத்தில் மின்வெட்டு: மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு விவரம்!
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வியாழன் கிழமை (ஜூலை 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோயம்புத்தூர் மாவட்டம் : பீளமேடு 110 கேவி மற்றும் கோவில்பாளையம் துணை மின் நிலையம்: பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், காளிமாடி, திருச்சி ரோடு, மீனா எஸ்டேட், உடையாம்பாளையம் மற்றும் சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மணிக்கம்பாளையம், அக்ரஹார சாமக்குளம், கொண்டையாம்பாளையம், குன்னத்தூர், காளிபாளையம், மொண்டிக்காளிபுதூர். பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டை வட்டாரம்: சமத்தூர், ஆவல்கிணத்துப்பாளையம், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பூச்சியூர், ஜாமின்கோட்டாம்பட்டி, வடுகபாளையம், நம்பிமுத்தூர், மைவாடி, கணியூர், மடத்தூர், மலையாண்டிபட்டினம்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கன்னியாகுமரி மாவட்டம்: கன்னியாகுமரி, தென்தாமரைகுளம், சுசீந்திரம், மயிலாடி, அழகப்பபுரம், அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம், கொட்டாரம், மருங்கூர், கோவளம், சின்னமுட்டம், ஈத்தாகோடு, குழித்துறை, பாலுகல், கலியக்காவிளை, அருமனை, ஏழுதேசம், ஆரல்வாய்மொழி, தேரூர் மற்றும் பூதப்பாண்டி. நாகப்பட்டினம் மாவட்டம்: நீடூர், அய்யாக்காரன்புலம், வாய்மேடு, கங்கணம்புத்தூர், அருவாபாடி, மொழையூர், கருப்பம்புலம், அய்யாக்காரன்புலம், கோவில்குளம், ஆலங்காடு, கரியப்பட்டினம் மற்றும் மாருதூர். திருப்பூர் மாவட்டம் (பல்லடம்): செல்லம்பாளையம், சந்திராபுரம், ரஞ்சித்புரம் ஃபீடர், தேவநல்லூர் மற்றும் கே.எம்.பாளையம் . தேனி மாவட்டம்: டொம்புச்சேரி, வீரபாண்டி, வயல்பட்டி, பி.சி.பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகள். தஞ்சாவூர் மாவட்டம்: பூண்டி, சலியமங்கலம் மற்றும் ராகவாம்பாள்புரம்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருவாரூர் மாவட்டம்: பெருவளந்தான், சித்தமல்லி, கோட்டூர், குமரமங்கலம் வட்டாரம், ஆதிச்சபுரம், பள்ளங்கோவில், வடகோவனூர், உம்பளச்சேரி, இடையூர், பாண்டி, கட்டிமேடு மற்றும் நெடும்பலம். வேலூர் மாவட்டம்: நெமிலி, மேல்வளத்தூர், கீழ்வளத்தூர், செல்வமந்தை, காட்டுப்பாக்கம், வெட்டகுளம், பல்லாவரம், பேரப்பேரி, கீழ்வீதி, கீழ்வெங்கடாபுரம், கீழ்துரை, மேல்துரை, அரிகில்பாடி, அனந்தாபுரம், செந்தாமங்கலம், தக்கோலம், ஆசநெல்லிகுப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் புன்னை சுற்றுவட்டாரப் பகுதிகள் விருதுநகர் மாவட்டம்: நென்மேனி, இருக்கன்குடி, கோசுகுண்டு, என்.மெட்டுப்பட்டி, அப்பநாயக்கன்பட்டி, சிறுவர்குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.