
கூறியபடியே வெற்றியின் உடலை மீட்டவர்களுக்கு 1 கோடி சன்மானம் வழங்கிய சைதை துரைசாமி
செய்தி முன்னோட்டம்
ஹிமாச்சல பிரதேசத்தின் சட்லெஜ் நதியில் இருந்து, 8 நாட்களுக்கு பிறகு சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமியின் உடல், நேற்று(12-பிப்ரவரி) மாலை மீட்கப்பட்டது.
இன்று பிரேத பரிசோதனை முடிவடைந்து, அவரது குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்படவுள்ளது.
அதனை தொடர்ந்து, ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம், வெற்றி துரைசாமியின் உடல், இன்று சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.
மாலை 5 மணி அளவில், CIT நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று மாலையே அவரது நல்லடக்கம் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்ற வாரம், மகனை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசளிப்பதாக சைதை துரைசாமி அறிவித்திருந்தார்.
அறிவித்ததுபோலவே, வெற்றியின் உடலை மீட்டவர்களுக்கு பணத்தை வழங்கியதாக செய்திகள் தெரிவிக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
வெற்றி துரைசாமியின் உடல் இன்று தகனம்
#NewsUpdate | முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் இன்று தகனம்#SunNews | #HimachalPradesh | #VetriDuraisamy pic.twitter.com/D3D0h8gec6
— Sun News (@sunnewstamil) February 13, 2024