
அனுமதியின்றி பேனர் வைத்தால் ரூ.5000 அபராதம்: நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் அனுமதியின்று விளம்பர பலகைகள், பேனர்கள் வைப்பது தற்போது வாடிக்கை ஆகிவிட்டது.
இது போன்ற பேனர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தெருக்களிலும் சாலைகளிலும் ஆங்காங்கே வைக்கப்படுகிறது.
இதனால் ஏற்படும் சாலை விபத்துக்களால் பல மனித உயிர்கள் பலியாகியுள்ளன.
இது போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் விதிகளின்படி, பேனர்களால் உயிரிழப்போ, காயமோ ஏற்பட்டால் அதற்குரிய இழப்பீட்டை பேனர் வைப்பவர்கள் தரவேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.
பெரிய பேனர் வைப்பவர்களுக்கு 3 வருட சிறை அல்லது 25,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அனுமதியின்றி பேனர் வைப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை அல்லது ரூ.5000/- அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
அனுமதி காலம் முடிந்த பிறகும் பேனரை அகற்றாமல் இருந்தால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்
#BREAKING | தமிழ்நாட்டில் விளம்பர பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகளை உரிய அனுமதியின்றி நிறுவக்கூடாது; மீறுவோர் மீது மீது ஒரு வருட சிறை தண்டனையோ அல்லது ₹5000 அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்க வழிவகை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - நகராட்சி நிர்வாகத்துறை தகவல்…
— Sun News (@sunnewstamil) June 9, 2023