NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடற்கரை பகுதியில் இரவுநேரத்தில் 12 மணிவரை இளைப்பாற அனுமதி வேண்டும் என கோரிக்கை
    கடற்கரை பகுதியில் இரவுநேரத்தில் 12 மணிவரை இளைப்பாற அனுமதி வேண்டும் என கோரிக்கை
    இந்தியா

    கடற்கரை பகுதியில் இரவுநேரத்தில் 12 மணிவரை இளைப்பாற அனுமதி வேண்டும் என கோரிக்கை

    எழுதியவர் Nivetha P
    May 12, 2023 | 03:01 pm 0 நிமிட வாசிப்பு
    கடற்கரை பகுதியில் இரவுநேரத்தில் 12 மணிவரை இளைப்பாற அனுமதி வேண்டும் என கோரிக்கை
    கடற்கரை பகுதியில் இரவுநேரத்தில் 12 மணிவரை இளைப்பாற அனுமதி வேண்டும் என கோரிக்கை

    காரைக்கால் கடற்கரை பகுதியில் பொதுமக்கள் இளைப்பாற இரவு நேரம் 12 மணிவரை அனுமதி வழங்கவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் காரைக்கால் கடற்கரை பகுதியில் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துவருகிறது. கோடை வெயிலின் தாக்கத்தினை குறைத்துக்கொள்ள மக்கள் இங்குவரும் நிலையில், காரைக்காலில் பொழுதுபோக்கும் இடமாக இந்த கடற்கரை ஒன்றே இருப்பதாலும் இங்கு கூட்டம் படையெடுக்கிறது. இங்கு வருவோரில் சிலர் இரவுநேர உணவினை முடித்துவிட்டு சற்று இளைப்பாற வருகிறார்கள். நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் இங்கு கூட்டம் தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதியிலுள்ள கடலோர காவல்துறையினர் இரவு 10.30 மணிக்கு சரியாக வந்து, அங்குள்ள பொதுமக்களை கடற்கரையினை விட்டு வெளியேற வற்புறுத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது.

    தேங்கும் குப்பைகளை தினந்தோறும் சுத்தம் செய்திட வேண்டும் 

    இது அங்கு நேரத்தை பொழுதுபோக்க வருவோருக்கு இடையூறாக உள்ளது என்பதால் கோடை விடுமுறை முடியும் வரை கடற்கரை பகுதியில் இரவு 12 மணி வரை குடும்பத்துடன் பொதுமக்கள் தங்கள் கோடை கால விடுமுறையினை கழிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதுகுறித்து சமூக ஆர்வலர் இராஜா முகமது என்பவர் கூறுகையில், இரவு 12 மணிவரை கடற்கரையில் பொதுமக்கள் இளைப்பாற அனுமதி வழங்கப்படுவதோடு, காவல்துறையினரின் பாதுகாப்பும் கொடுக்கப்பட வேண்டும். மேலும் கடற்கரையில் தேங்கும் குப்பைகளை தினந்தோறும் சுத்தம் செய்து பொதுமக்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கேட்டினை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கடற்கரை
    காவல்துறை
    காவல்துறை
    சுற்றுலா

    கடற்கரை

    ராமேஸ்வரம் அருகே வெடிகுண்டு புதைத்து வைத்திருப்பதாக தகவல் - நிபுணர்கள் சோதனை  ராமேஸ்வரம்
    கோடை விடுமுறையை கழிக்க, சென்னையை சுற்றி உள்ள கடற்கரைகளுக்கு விசிட் அடிக்கலாமா? சென்னை
    இந்தியாவில் உள்ள இந்த  Bioluminescent அல்லது ஒளிரும் கடற்கரைகளை பற்றி தெரியுமா?  சுற்றுலா
    தமிழகத்தில் இன்று(ஏப்ரல்.,14) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் துவக்கம்  தமிழ்நாடு

    காவல்துறை

    பற்களை பிடுங்கிய விவகாரம் - சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 24 பேர் இடமாற்றம்  காவல்துறை
     கர்நாடகாவில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த கிராம மக்கள்  கர்நாடகா
    கார் சாவியை காணவில்லை என புகார் அளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த் ரஜினிகாந்த்
    கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல்  தமிழ்நாடு

    காவல்துறை

    உதவி இயக்குனர் மீது கிரிமினல் வழக்கு; கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பா.ரஞ்சித் பா ரஞ்சித்
    சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது  சென்னை
    பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீது பாய்ந்த கிரிமினல் வழக்குகள் பா ரஞ்சித்
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு  திருப்பதி

    சுற்றுலா

    எழில் கொஞ்சும் கேரளாவில் நீங்கள் ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்கள் கேரளா
    நடிகர் அஜித்தின் உலக சுற்றுப்பயணம்  குறித்து வெளியான புது தகவல்  நடிகர் அஜித்
    தங்கள் ஊரில் குடியேற, அரசாங்கமே பணம் தரும் விசித்திர நாடுகள் பற்றி கேள்விப்பட்டதுண்டா? உலகம்
    காஷ்மீர் சுற்றுலா: அதிகம் பிரபலமாகாத சுற்றுலா இடங்கள் சுற்றுலாத்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023