ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, இன்று(மார்ச் 14), 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் குறித்த விரிவான அறிக்கையை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தது. ஒரே நேரத்தில் தேர்தல் சுழற்சியை மீட்டெடுக்க சட்டப்பூர்வமாக உறுதியான வழிமுறையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று உயர்மட்டக் குழு பரிந்துரைத்தது உள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கை 18,626 பக்கங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது, செப்டம்பர் 2, 2023 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து, 191 நாட்கள், பங்குதாரர்கள், நிபுணர்கள் மற்றும் அதை சார்ந்த ஆராய்ச்சிகளை தொடர்ந்து பெறப்பட்ட விரிவான ஆலோசனைகளின் அறிக்கையாகும். முன்னதாக டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில், இந்த குழு ஜனாதிபதி முர்முவை சந்தித்து இந்த விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது.