
வெளிமாநிலங்களில் பதுங்கிய ரவுடிகளை கைது செய்ய உத்தரவு - காவல்துறை டி.ஜி.பி. அதிரடி
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் 'ஆப்பரேஷன் மின்னல் ரவுடி வேட்டை' என்னும் பெயரில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
வெளிமாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ள ரவுடிகளை கைதுசெய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
அதன்படி, 72 மணி நேரத்தில் 3,095 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இது குறித்த தொடர் விசாரணையில் தமிழகத்தை சேர்ந்த ரவுடிகள் கேரளா, மஹாராஷ்டிரா, பீகார் போன்ற வெளிமாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதே போன்று வெளிமாநில ரவுடிகளுக்கு தமிழக ரவுடிகளும் தஞ்சம் அளிக்கிறார்களாம்.
மஹாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் துப்பாக்கி எளிதாக கிடைப்பதால் ரவுடிகள் அங்கு படையெடுப்பதாக கூறப்படுகிறது.
மேலும் வெளிமாநிலங்களில் பதுங்கியுள்ள சில ரவுடிகள் அங்கிருந்தபடியே தனது கூட்டாளிகளுடன் தொடர்பு கொண்டு குற்றச் செயல்களுக்கு தூண்டுதலாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
பிடி வாரண்ட்
ஜாமீனில் வெளியான ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு
இதனையடுத்து, 'இது போன்று வெளிமாநிலங்களில் தஞ்சம் அடைந்த ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து, விரைந்து கைது செய்ய வேண்டும்' என்று காவல்துறைக்கு டிஐஜி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து, கடந்த 6 மாதங்களில் ஜாமீனில் வெளியான ரவுடிகள் பட்டியலை காவல்துறையினர் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், நீதிமன்றத்தில் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட ரவுடிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கூறினர்.
அதன் தொடர்ச்சியாக, இவர்களுள் சிலர் வெளிமாநிலங்களில் பதுங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது என்றும்,
அவர்களை அம்மாநில போலீசார் உதவியுடன் விரைவில் கைது செய்யப்போவதாகவும் தெரிவித்தனர்.