'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது மாநிலங்கள் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி
செய்தி முன்னோட்டம்
"ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற கருத்து இந்திய யூனியன் மற்றும் அதன் அனைத்து மாநிலங்களுக்கும் எதிரான தாக்குதல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில்(எக்ஸ் தளம்) பதிவிட்டிருக்கும் ராகுல் காந்தி, "இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாகும். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற எண்ணம் யூனியன் மற்றும் அதன் அனைத்து மாநிலங்களின் மீதான தாக்குதலாகும்" என்று கூறியுள்ளார்.
ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய பாஜக அரசு தீவிரமாக விவாதித்து வருகிறது.
இதற்காக நேற்று, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை அரசு அமைத்தது.
டிரோஜ்வ்க்
மல்லிகார்ஜுன கார்கேவை புறக்கணித்த மத்திய அரசு
இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற யோசனையை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு நேற்று இந்த உயர்மட்ட குழுவை அமைத்தது.
அந்த குழுவில் இடம்பெறுவதற்கான அழைப்பை நேற்று நிராகரித்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அந்த குழுவில் இருந்து நீக்கியதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.
அந்தக் குழுவில் கார்கேவுக்குப் பதிலாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தை அரசு சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவை, மாநில சட்டசபைகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து, இந்த புதிய குழு ஆய்வு செய்ய உள்ளது.