Page Loader
தேசிய அலுவல் மொழி குறித்து காயிதே மில்லத் - வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்
தேசிய அலுவல் மொழி குறித்து காயிதே மில்லத் - வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

தேசிய அலுவல் மொழி குறித்து காயிதே மில்லத் - வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

எழுதியவர் Nivetha P
Feb 21, 2023
06:03 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் திருவல்லிகேணியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஏழாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கண்ணியமிகு தலைவர் என்ற தலைப்பில் காயிதே மில்லத் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. இதில், மொழிக்கொள்கை என்னும் தலைப்பில் சுதந்திரத்திற்கு பின் ஆட்சிமொழியை தேர்வு செய்வதற்கான அரசியல் நிர்ணய சபை கூட்டத்தில் பழமையான தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என காயிதே மில்லத் பேசியதாக தவறான தகவல் இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த கூட்டத்தில் தமிழ் பழமையான மொழியாக இருந்தாலும், அதிக மக்கள் பேசும் மொழியாக இல்லாததால் அதனை நாட்டின் அலுவல் மொழியாக அறிவிக்க வற்புறுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தள்ளுபடி செய்த நீதிமன்றம்

வரலாற்று உண்மைகளை அரசியல் காரணங்களுக்காக மாற்ற கூடாது என மனு தாக்கல்

இந்துஸ்தானி, தேவநகரி அல்லது உருது மொழியை தேசிய அலுவல் மொழியாக அறிவிக்கலாம் என்று அவர் பேசியிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. வரலாற்று உண்மைகளை அரசியல் காரணங்களுக்காக மாற்ற கூடாது. பள்ளி மாணவர்களுக்கு தவறான வரலாற்றை போதிக்க கூடாது என்று அந்த மனுவில் அவர் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த தவறுகளை நீக்கி திருத்தம் செய்யக்கோரி பள்ளி கல்வித்துறை செயலாளர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழும இயக்குநருக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர் கோரிக்கையினை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.