NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் எதற்கு சம்மன் அனுப்பியது
    மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் எதற்கு சம்மன் அனுப்பியது
    இந்தியா

    மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் எதற்கு சம்மன் அனுப்பியது

    எழுதியவர் Sindhuja SM
    May 15, 2023 | 04:17 pm 1 நிமிட வாசிப்பு
    மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் எதற்கு சம்மன் அனுப்பியது
    நீதிமன்றம், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

    ரூ.100 கோடி அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் இன்று(மே 15) சம்மன் அனுப்பியுள்ளது. தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை(PFI) பஜ்ரங் தளத்துடன் ஒப்பிட்டு பேசியதால் அவருக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. பஜ்ரங் தளம் என்பது விஸ்வ ஹிந்து பரிஷத் சங்கத்தின் இளைஞர் பிரிவாகும். இந்த சங்கம் பாஜகவுடன் நேரடி தொடர்புடைய RSS அமைப்பிற்கு மிக நெருக்கமான ஒரு சங்கமாகும். எனவே, கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் போது, பஜ்ரங் தளத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன்(PFI) ஒப்பிட்டு பேசியதால் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எதிராக பஞ்சாப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    ஹிதேஷ் பரத்வாஜ் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நீதிமன்ற விசாரணை நடந்தது 

    "பஜ்ரங் தளம் ஹிந்துஸ்தான்" என்ற அமைப்பின் தலைவரான ஹிதேஷ் பரத்வாஜ் அளித்த புகாரின் பேரில், பஞ்சாப்பின் சங்ரூர் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தளத்தை "சிமி மற்றும் அல்-கொய்தா போன்ற தேச விரோத அமைப்புகளுடன் ஒப்பிட்டது" என்று மனுதாரர் கூறியுள்ளார். காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், பஜ்ரங் தளம் போன்ற "பெரும்பான்மை அல்லது சிறுபான்மை சமூகத்தினரிடையே பகை அல்லது வெறுப்பை" ஊக்குவிக்கும் அமைப்புகளைத் தடை செய்வதாக உறுதியளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மனுதாரரின் புகாரை விசாரித்த நீதிமன்றம், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    காங்கிரஸ்
    பாஜக
    கர்நாடகா
    கர்நாடகா தேர்தல்
    கர்நாடகா தேர்தல் 2023
    பஞ்சாப்

    இந்தியா

    இந்தியப் பெருங்கடலில் ரூ.25,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் கடற்படை
    கோஹினூரை மீட்பதற்கு இந்தியா முயற்சிக்கவில்லை: இங்கிலாந்து ஊடக அறிக்கைகள் தவறானவை  பிரிட்டன்
    இந்தியாவில் ஒரே நாளில் 801 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு கொரோனா
    மெர்சிடீஸ் பென்ஸாக மாறிய டாடா சுமோ.. வைரலான வீடியோ! எஸ்யூவி

    காங்கிரஸ்

    கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்: டெல்லியில் கூடுகிறது காங்கிரஸ் கட்சி கூட்டம் இந்தியா
    முடிவடைந்தது வாக்கு எண்ணிக்கை: கர்நாடகாவில் காங்கிரஸுக்கு தனி பெரும் வெற்றி  இந்தியா
    திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்  இந்தியா
    கர்நாடக தேர்தல்; ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது: ராகுல் காந்தி  இந்தியா

    பாஜக

    கர்நாடக தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டது பாஜக  இந்தியா
    கர்நாடக தேர்தல் 2023: வாக்கு எண்ணிக்கை பாதி முடிந்துவிட்டது, முன்னிலையில் இருப்பது யார்? கர்நாடகா தேர்தல்
    கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது இந்தியா
    'தி கேரளா ஸ்டோரி' விவகாரம்: தமிழ்நாடு, மேற்கு வங்க அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்  இந்தியா

    கர்நாடகா

    வெற்றியின் விழிம்பில் காங்கிரஸ்: ஆனந்த கண்ணீர் வடித்த டி.கே.சிவகுமார்  இந்தியா
    கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்குகிறது இந்தியா
    கர்நாடக தேர்தல்: ஜனதா தளத்தை தொடர்புகொண்ட காங்கிரஸ் மற்றும் பாஜக  கர்நாடகா தேர்தல்
    கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 2 கர்நாடகா தேர்தல்

    கர்நாடகா தேர்தல்

    கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 1 இந்தியா
    வாக்களிக்காமல் பேச நமக்கு எந்த உரிமையும் இல்லை: இன்போசிஸ் சுதா மூர்த்தி கர்நாடகா
    அடுத்த கர்நாடக முதல்வர் யார்: இன்று டெல்லி செல்கிறார் டி.கே.சிவகுமார் இந்தியா
    சித்தராமையா Vs டிகே.சிவகுமார் பிரச்சனை: கர்நாடகாவில் ஆட்சி காலம் இரண்டாக பிரிக்கப்படுமா  இந்தியா

    கர்நாடகா தேர்தல் 2023

    கர்நாடக முதல்வராகிறாரா சித்தராமையா: டிகே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி இந்தியா
    கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுக்கும் பிரச்சனை: இன்று என்ன நடந்தது இந்தியா
    அவதூறு வழக்கு: ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாருக்கு சம்மன்  இந்தியா

    பஞ்சாப்

    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே 3வது முறையாக குண்டுவெடிப்பு இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு இந்தியா
    காலமான முன்னாள் பஞ்சாப் முதல்வரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி  இந்தியா
    அசாம் சிறையில் அடைக்கப்பட்டார் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023