புனே போர்ஷே விபத்து: காரை ஓட்டிய சிறுவனின் தாத்தா கைது
கடந்த மே 19ஆம் தேதி பைக்கில் வந்த இரண்டு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மீது தனது ஸ்போர்ட்ஸ் காரை விட்டு ஏற்றிய 17 வயது சிறுவனின் தாத்தா சுரேந்திர அகர்வாலை புனே காவல்துறை இன்று கைது செய்தது. இந்த விபத்தின் போது ஓட்டுநரின் தாத்தா சுரேந்திர அகர்வால், ஓட்டுநர் கங்கராமை மிரட்டியதாகவும், போர்ஷை தான் ஓட்டியதாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக புனே குற்றப்பிரிவு புதிய வழக்கை பதிவு செய்ததை அடுத்து, சுரேந்திர அகர்வால் இன்று அதிகாலை 3 மணிக்கு அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார். புனே போர்ஷே விபத்து வழக்கில்பதிவு செய்யப்படும் மூன்றாவது எப்ஐஆர் இதுவாகும்.
சுரேந்திர அகர்வாலின் மீது மற்றொரு குற்ற வழக்கு
முன்னதாக, விபத்து நடந்த நாளில் சுரேந்திர அகர்வா அவரது மகன் மற்றும் பேரன் மற்றும் பேசிய உரையாடல்களைப் பற்றி மேலும் அறிய புனே குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். விபத்தை ஏற்படுத்திய போர்ஷே ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர்களில் அகர்வாலும் ஒருவர் என்றும் போலீசார் தெரிவித்தனர். கேங்ஸ்டர் சோட்டா ராஜனுக்கு பணம் கொடுத்ததாக ஒரு துப்பாக்கிச் சூடு வழக்கில் சுரேந்திர அகர்வாலிடம் இன்னொரு வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.