LOADING...
பொங்கல் தொகுப்புடன் ரேஷன் கார்டு தாரர்களுக்கு ₹1,000; யாருக்கெல்லாம் கிடைக்கும்? முதல்வர் அதிரடி அறிவிப்பு
புதுச்சேரியில் பொங்கல் தொகுப்புடன் ரேஷன் கார்டு தாரர்களுக்கு ₹1,000 அறிவிப்பு

பொங்கல் தொகுப்புடன் ரேஷன் கார்டு தாரர்களுக்கு ₹1,000; யாருக்கெல்லாம் கிடைக்கும்? முதல்வர் அதிரடி அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Dec 29, 2025
07:26 pm

செய்தி முன்னோட்டம்

2026 ஆம் ஆண்டு தைப் பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி அரசு ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி திங்கட்கிழமை (டிசம்பர் 29) செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ₹1,000 ரொக்கம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்தத் தொகை நேரடியாகப் பயனாளிகளின் வங்கித் கணக்கில் செலுத்தப்படும். ரொக்கப் பணம் தவிர, பொங்கல் சமைக்கத் தேவையான அத்தியாவசியப் பொருட்களும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளன. இதில் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் முழு நீளக் கரும்பு இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விநியோகம்

பொங்கல் பரிசு விநியோகம்

இந்த பொங்கல் தொகுப்பு விநியோகம் வரும் ஜனவரி 3, 2026 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால், ஏனாம், மாஹே ஆகிய பகுதிகளில் உள்ள சிவப்பு (BPL) மற்றும் மஞ்சள் (APL) நிற ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும். சுமார் 3.5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். முதியவர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்குப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி மற்றும் சேலைகளும் சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement