NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதுச்சேரியில் துப்புரவு பணியாளர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் ட்ரீட் கொடுத்த எம்.எல்.ஏ.
    இந்தியா

    புதுச்சேரியில் துப்புரவு பணியாளர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் ட்ரீட் கொடுத்த எம்.எல்.ஏ.

    புதுச்சேரியில் துப்புரவு பணியாளர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் ட்ரீட் கொடுத்த எம்.எல்.ஏ.
    எழுதியவர் Nivetha P
    Mar 17, 2023, 05:39 pm 1 நிமிட வாசிப்பு
    புதுச்சேரியில் துப்புரவு பணியாளர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் ட்ரீட் கொடுத்த எம்.எல்.ஏ.
    புதுச்சேரியில் துப்புரவு பணியாளர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் ட்ரீட் கொடுத்த எம்.எல்.ஏ.

    புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ.சம்பத் தனது பிறந்த நாளினையொட்டி தனது தொகுதியில் உள்ள அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் ஸ்டார் ஹோட்டலில் விருந்து அளித்துள்ளார். இந்த விருந்தானது எது தேவையோ அதனை எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி சாப்பிட கூடிய Buffet முறையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. விருந்தினை கொடுத்தது மட்டுமல்லாமல் பெண் துப்புரவு ஊழியர்களுக்கு புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ. சம்பத் அவர்கள் ஆளுக்கொரு புடவையையும் அளித்துள்ளார். மேலும் சம்பத் அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்தினை அவரே தனது கைகளால் பரிமாறியும் உள்ளார்.

    இதுபோன்ற ஹோட்டல்களை வெளியில் இருந்து தான் பார்த்துள்ளோம் - துப்புரவு பணியாளர்கள்

    இதனை தொடர்ந்து புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ. சம்பத் விருந்து பரிமாறிய கையோடு தானும் ஒரு தட்டில் சாப்பாடு போட்டுகொண்டு போய் அவர்கள் மத்தியில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். அதே போல் விருந்து முடிந்த பின்னர் அவர் தூய்மை பணியாளர்கள் அனைவரையும் உடனிருந்து வழியனுப்பியுள்ளார். இவரது இந்த உபசரணையில் மயங்கிப்போன துப்புரவு பணியாளர்கள் அவரை வாழ்த்தியபடி மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்கள். இதற்கிடையே இந்த அனுபவம் குறித்து துப்புரவு பணியாளர்கள், நாங்கள் பெற்ற பிள்ளைகள் கூட எங்களை இது போன்ற இடங்களுக்கு அழைத்து வந்ததில்லை. இந்த ஹோட்டலை எல்லாம் நாங்கள் வெளியில் இருந்து தான் பார்த்திருக்கிறோம் என்று மகிழ்ச்சியோடு கூறியது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    திமுக
    புதுச்சேரி

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    திமுக

    தமிழகத்தில் ரூ.1000 பெண்கள் உரிமைத் தொகை யார் யாருக்கு என்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் தமிழ்நாடு செய்தி
    தமிழக பட்ஜெட் 2023: விவேகமான நிதி நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழ்நாடு
    ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஓபிஎஸ் கட்சி தாவுவதற்கு வாய்ப்பிருக்கிறதா தமிழ்நாடு
    திமுக நிகழ்ச்சிகளில் கட்-அவுட், பேனர்கள் வைக்க தடை - அமைப்பு செயலாளர் அறிவிப்பு தமிழ்நாடு

    புதுச்சேரி

    வானிலை அறிக்கை: மார்ச் 23- மார்ச் 27 தமிழ்நாடு
    வானிலை அறிக்கை: மார்ச் 22- மார்ச் 26 தமிழ்நாடு
    வானிலை அறிக்கை: மார்ச் 21- மார்ச் 25 தமிழ்நாடு
    வானிலை அறிக்கை: மார்ச் 20- மார்ச் 24 தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023