Loading...
புதுச்சேரி 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.700 தீபாவளி பரிசு மளிகைத் தொகுப்பு
புதுச்சேரியில் 3 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.700 மதிப்பிலான தீபாவளி மளிகைத் தொகுப்பு அறிவிக்கபட்டுள்ளது.

புதுச்சேரி 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.700 தீபாவளி பரிசு மளிகைத் தொகுப்பு

எழுதியவர் Vasuki
Oct 14, 2026
02:00 pm

செய்தி முன்னோட்டம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு அம்மாநில மக்களுக்கு ஒரு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் வகையில், யூனியன் பிரதேசத்தில் உள்ள சுமார் 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.700 மதிப்பிலான இலவச மளிகைத் தொகுப்பு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. பண்டிகைக்காலச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில், சமையலுக்குத் தேவையான 5 முக்கிய அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பாக இது வழங்கப்படும் என்று குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு முன்பாகவே அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலமும் நெரிசலின்றி பொதுமக்களுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இலவச அரிசி 

தொகுப்பில் உள்ள பொருட்கள் 

இந்தச் சிறப்புத் தொகுப்பில் 2 லிட்டர் சமையல் எண்ணெய், 2 கிலோ சர்க்கரை, 1 கிலோ கடலைப் பருப்பு, அரை கிலோ ரவை மற்றும் அரை கிலோ மைதா ஆகிய பொருட்கள் இடம்பெறவுள்ளன.

மேலும், நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள இலவச அரிசி வழங்கும் பணி விரைவாகச் சீரமைக்கப்பட்டு, இன்னும் ஒரு மாதத்திற்குள் மீண்டும் தடையின்றி வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அரசின் இந்த அடுத்தடுத்த அறிவிப்புகள் புதுச்சேரி மக்களிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் பெற்றுள்ளன.

ADVERTISEMENT