
சென்னை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
செய்தி முன்னோட்டம்
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களோடு இணைந்து வரும் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 21ம்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
அதன்படி இந்த முகாம் கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 2 மணவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் 8, 10, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் உள்ளிட்ட தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#தகவல்பலகை | சென்னையில் நாளை மறுநாள் வேலைவாய்ப்பு முகாம்!#SunNews | #Chennai | #JobAlert pic.twitter.com/vc2nCe9ftM
— Sun News (@sunnewstamil) April 19, 2023