இன்று கோவை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
செய்தி முன்னோட்டம்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(பிப் 18) கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.
112 அடி உயர ஆதியோகி முன் இரவு முழுவதும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் உள்ள புகழ்பெற்ற கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.
தனி விமானத்தின் மூலம் டெல்லியில் இருந்து கிளம்பும் குடியரசு தலைவர் 11.45 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைகிறார்.
அதன்பின், அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
இதனால் மதுரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை
ஈஷா யோகா மையத்தில் நடக்கும் சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் கலந்து கொள்கிறார்
பின்னர், 3.10 மணியளவில் அவர் மதுரையிலிருந்து கோவை விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வந்தடைகிறார்.
கோவையில் அவருக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அழிக்கப்படுகிறது.
மேலும், கோவையிலும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வரவேற்பு நிகழ்ச்சிகளை முடிக்கும் குடியரசு தலைவர், அதன் பின், குண்டு துளைக்க முடியாத காரில் ரேஸ்கோர்ஸில் இருக்கும் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் அவர் ஓய்வெடுக்கிறார்.
பின், 5:45 மணிக்கு ஈஷா யோகா மையத்தில் நடக்கும் நவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமை தாங்குகிறார்.
குடியரசு தலைவர் கோவைக்கு வருவதால் அங்கு 5 அடுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.