Page Loader
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை (ஜனவரி 29) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 28, 2025
01:15 pm

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (ஜனவரி 29) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கள்ளக்குறிச்சி: 22 கேவி மரவநத்தம், 22 கேவி டவுன், 22 கேவி எலியத்தூர், 22 கேவி கட்டானந்தல், 22 கேவி தச்சூர், 22 கேவி சிறுவத்தூர், 22 கேவி ஆவின் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் காலை 9 மணி-பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அமலில் இருக்கும்.

மின்தடை 

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

நாமக்கல்: ஏமப்பள்ளி, இளநகர், கொமாரபாளையம், புதன்சந்தை, பளைபாளையம், காளப்பநாயக்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை டிஎஸ்டி பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அமலில் இருக்கும். சேலம்: டவுன், பாப்பாரப்பட்டி, வாணியம்பாடி, கடத்தூர், பாலம்பட்டி ஆகிய பகுதிகளில் துணைமின் நிலையம் மற்றும் ஃபீடர் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும். தஞ்சாவூர்: கரம்பையம், பாப்பாநாடு, ஆலத்தூர், பூண்டி, ராகவாம்பாள்புரம், அய்யம்பேட்டை, மேலாத்தூர் ஆகிய பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.