LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

எழுதியவர் Sekar Chinnappan
Dec 01, 2025
10:37 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (டிசம்பர் 2) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு: தஞ்சாவூர் : தஞ்சாவூர், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அருளானந்தா நகர், யாகப்பா நகர், குழந்தை ஏசு கோவில் பகுதி. இங்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அமலில் இருக்கும்.

மின்தடை

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

உடுமலைப்பேட்டை: கிழவன் காட்டூர், எலைய முத்தூர், பரிசனம் பட்டி, கல்லா புரம், செல்வ புரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்த புரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்ப நாயக்கனூர், ஆலம் பாளையம். மேலே குறிப்பிட்ட பகுதிகளில் கிழவன் காட்டூர் (எலைய முத்தூர்) துணை மின் நிலையத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.

Advertisement