திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம்
திருச்சி உள்ள எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வரும் துரை மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம் மீது கொலை, நகை திருட்டு போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளது. குறிப்பாக சோமசுந்தரம் மீது ஆட்கடத்தல், கஞ்சா கடத்தல் போன்ற வழக்குகளும் பதிவாகியுள்ளது என்று கூறப்படுகிறது. இதனையடுத்து உறையூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மோகன் நகை திருட்டு குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த விசாரணையில் அவர்கள் குழுமாயி அம்மன் கோயில் அருகே நகைகளை பதுக்கி வைத்துள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, நகை உள்ள இடத்தினை கண்டறிந்து கூற இவர்கள் இருவரும் காவல் வாகனத்தில் அப்பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்கள். வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில் ரவுடிகளான துரையும் சோமசுந்தரமும் வாகனத்தில் இருந்து காவலர்களை தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளார்கள்.
ரவுடிகளின் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு
தப்பித்து ஓடும் அந்த ரவுடிகளை விரட்டி பிடிக்க காவல் ஆய்வாளர் மோகன், தலைமை காவலர்கள் சிற்றரசு, அசோக் ஆகியோர் முயற்சித்தனர். அப்போது அப்பகுதி முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிவாளை கொண்டு காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இவர்கள் இருவரும் சரமாரியாக வெட்டியுள்ளார்கள். அவர்களிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக போலீசார் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி மடக்கி பிடித்துள்ளார்கள். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார், காயம்பட்ட காவல்துறையினரையும், ரவுடிகளையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்பகுதியினை திருச்சி ஆய்வாளர் சத்ய பிரியா ஆய்வு செய்தார். காவல் துறையின் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.