
கோவை பள்ளியில் நடந்த போக்ஸோ விழிப்புணர்வு நிகழ்ச்சி - பாலியல் வன்கொடுமை குறித்து கூறிய 12 வயது சிறுமி
செய்தி முன்னோட்டம்
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடந்துகொண்டு தான் உள்ளது.
வயது வித்தியாசமின்றி சிறு குழந்தை முதல் வயதான பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிவருகிறார்கள்.
இதுகுறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் கோவையில் உள்ள ஒரு பள்ளியில் அண்மையில் போக்ஸோ விழிப்புணர்வு நிகழ்ச்சியினை சைல்டுலைன் அதிகாரிகள் நடத்தியுள்ளார்கள்.
அப்போது அந்த அதிகாரிகளிடம் 12வயது சிறுமி ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து கூறியுள்ளார்.
மனநலம் பாதித்த தாயுடன் வசித்துவரும் அந்த சிறுமிக்கு நீண்ட நாட்களாக பாலியல்வன்கொடுமை நடந்துவந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியின் பக்கத்துவீட்டில் உள்ள சதாசிவம்(48), மதன்(24), குமார்(18) ஆகியோர் சிறுமி அளித்த தகவலின்பேரில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ட்விட்டர் அஞ்சல்
கோவை பள்ளியில் நடந்த போக்ஸோ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அதிர்ச்சி சம்பவம்
#JUSTIN | பள்ளியில் நடந்த போக்சோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை சைல்டுலைன் அதிகாரிகளிடம் கூறிய 12 வயது சிறுமி#SunNews | #Coimbatore | #PocsoAct pic.twitter.com/Lp4LRBA1iU
— Sun News (@sunnewstamil) March 22, 2023