Page Loader
பீகாரில் ரூ.1,700 கோடி மதிப்பிலான புதிய நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 

பீகாரில் ரூ.1,700 கோடி மதிப்பிலான புதிய நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 

எழுதியவர் Sindhuja SM
Jun 19, 2024
12:08 pm

செய்தி முன்னோட்டம்

நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, நரேந்திர மோடி பீகாருக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும். மேலும், இன்று பீகாரில் உள்ள பழமையான நாளந்தா பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளையும் அவர் பார்வையிட்டார். இந்த இடிபாடுகள் 2016 இல் ஐக்கிய நாடுகளின் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. "நமது கல்வித் துறைக்கு இது மிகவும் சிறப்பான நாள். இன்று காலை சுமார் 10:30 மணிக்கு, நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம் ராஜ்கிரில் திறக்கப்படும். நாளந்தா நமது புகழ்பெற்ற பகுதியுடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது." என்று அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

பீகார் 

இரண்டு கல்வித் தொகுதிகளை கொண்ட வளாகம் 

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் நிதிஷ் குமார், நாளந்தா பல்கலைக்கழக வேந்தர் அரவிந்த் பனகாரியா ஆகியோர் இன்றைய திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். ஆஸ்திரேலியா, வங்கதேசம், பூடான், புருனே, தாருஸ்ஸலாம், கம்போடியா, சீனா, இந்தோனேஷியா, லாவோஸ், மொரீஷியஸ், மியான்மர், நியூசிலாந்து, போர்ச்சுகல், சிங்கப்பூர், தென் கொரியா, இலங்கை, வியட்நாம் என மொத்தம் 17 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு தூதர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இன்று திறக்கப்பட்ட வளாகம் இரண்டு கல்வித் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றிலும் 40 வகுப்பறைகள் மற்றும் மொத்த 1900 இருக்கைகள் உள்ளன. இதில் இரண்டு ஆடிட்டோரியங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 300 பேர் அமரும் திறன் கொண்டது.