தமிழகத்திற்கு வர இருக்கும் மெகா டெக்ஸ்டைல் பார்க்: பிரதமர் மோடி அறிவிப்பு
தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் PM மித்ரா மெகா டெக்ஸ்டைல் பார்க்குகள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார் 17) அறிவித்தார். "PM மித்ரா மெகா டெக்ஸ்டைல் பார்க்குகள், 5F (Farm to Fibre to Factory to Fashion to Foreign) கொள்கைக்கு ஏற்ப ஜவுளித் துறையை மேம்படுத்தும் தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மபி மற்றும் உபியில் PM மித்ரா மெகா டெக்ஸ்டைல் பார்க்குகள் அமைக்கப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்று பிரதமர் ட்விட்டரில் கூறியுள்ளார்.
ரூ.4,445 கோடி செலவில் டெக்ஸ்டைல் பார்க்குகள்
"PM மித்ரா மெகா டெக்ஸ்டைல் பார்க்குகள் ஜவுளித் துறைக்கான அதிநவீன வசதிகளை வழங்கும், கோடிக்கணக்கான முதலீட்டை ஈர்க்கும் மற்றும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். 'மேக் இன் இந்தியா' மற்றும் 'மேக் ஃபார் தி வேர்ல்டு' என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும்." என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். உற்பத்தி ஊக்கத்தொகையின் கீழ், ஜவுளித் துறையில் இதுவரை சுமார் ₹ 1,536 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று ஜவுளி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 2027-28 ஆண்டுகளுக்குள் ரூ.4,445 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த ஏழு மெகா ஒருங்கிணைந்த டெக்ஸ்டைல் மற்றும் ஆடை பார்க்குகளை அமைக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.