நாடு முழுவதும் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை; தலைவர்கள் வாழ்த்து
இன்று, இஸ்லாமியர்களின் புனித நாளான பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளன்று, இப்ராகிம் நபி, இஸ்மாயில் நபி ஆகியோரின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், தியாகத்தை போற்றும் வகையிலும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த பக்ரீத் திருநாளன்று, அதிகாலையிலேயே, உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். குறிப்பாக டெல்லி ஜமா மஸ்ஜித்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுகூடி பிராத்தனை செய்தனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, 'பெருந்தியாகத்தை நினைவூட்டுகிறது' என தலைப்பிட்டு தனது வாழ்த்துக்களை உலக தலைவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் தெரிவித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலினும், "சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்பு நெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இசுலாமிய பெருமக்கள் அனைவருக்கும் பக்ரித் பெருநாள் வாழ்த்துகள்" என தெரிவித்தார்.