Page Loader
ரஷ்யாவின் 'ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர்' விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவம்
ரஷ்யாவின் உயரிய குடிமகன் விருதான புனித ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர் விருதை வழங்கினார் விளாடிமிர் புடின்

ரஷ்யாவின் 'ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர்' விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 09, 2024
07:07 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் மோடி திங்களன்று ரஷ்யா சென்றடைந்தார். இந்த விஜயம் பரந்த புவிசார் அரசியல் சூழலையும் முக்கியத்துவத்தையும் கொண்டதாக பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இரு தலைவர்களும் இரு நாட்டின் அரசியல் சூழல் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து பேசினார். அதன் பின்னர் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடிக்கு, அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யாவின் உயரிய குடிமகன் விருதான புனித ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர் விருதை வழங்கினார். "அன்புள்ள நண்பரே, இந்த மிக உயர்ந்த ரஷ்ய விருதுக்கு நான் உங்களை வாழ்த்த விரும்புகிறேன், உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், வெற்றி மற்றும் அனைத்து நல்வாழ்த்துக்களையும் விரும்புகிறேன். நட்பு மிக்க இந்திய மக்களுக்கு, நான் செழிப்பு மற்றும் அமைதியை விரும்புகிறேன்" எனக்கூறி இந்த விருதை மோடிக்கு அளித்தார் புடின்.

ட்விட்டர் அஞ்சல்

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய  குடிமகன் விருது

ட்விட்டர் அஞ்சல்

விருதுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி