LOADING...
ராணுவ மோதல்களால் எதற்கும் தீர்வுகாண முடியாது: அமெரிக்கா - ஈரான் போர் குறித்து பிரதமர் மோடி அதிரடி பேச்சு
ராணுவ மோதல்களால் எதற்கும் தீர்வுகாண முடியாது என பிரதமர் மோடி அதிரடி பேச்சு

ராணுவ மோதல்களால் எதற்கும் தீர்வுகாண முடியாது: அமெரிக்கா - ஈரான் போர் குறித்து பிரதமர் மோடி அதிரடி பேச்சு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 05, 2026
04:39 pm

செய்தி முன்னோட்டம்

பின்லாந்து நாட்டு அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் அவர்களுடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தற்போதைய உலகளாவிய மோதல்கள் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார். "இந்தியா எப்போதும் சட்டத்தின் ஆட்சி, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர உறவுகளையே நம்புகிறது. உக்ரைன் அல்லது மேற்கு ஆசியா என எந்தப் பகுதியாக இருந்தாலும், ராணுவ மோதல்களால் மட்டும் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாது." என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

மத்திய கிழக்கு

பற்றி எரியும் மத்திய கிழக்கு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தையே உலுக்கியுள்ளன. கடந்த வார இறுதியில் ஈரானின் உயர்மட்டத் தலைவரான கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா - ஈரான் இடையே நேரடிப் போர் மூண்டுள்ளது. இந்த மோதலால் மத்திய கிழக்கின் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச அளவில் ஒரு நிலையற்ற சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல்

இலங்கை அருகே தாக்கப்பட்ட ஈரான் கப்பல்

சமீபத்தில் இலங்கைக் கடற்கரைக்கு அப்பால் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ஐஆர்ஐஎஸ் டெனா என்ற கப்பல் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தக் கப்பல் இந்தியாவின் விருந்தினராக வந்ததாக ஈரான் தரப்பு கூறியது. ஆனால், பிப்ரவரி 16 முதல் 25 வரை விசாகப்பட்டினத்தில் நடந்த சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்க மட்டுமே அந்தக் கப்பல் இந்தியாவிற்கு வந்திருந்ததாக அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. பிப்ரவரி 25 க்குப் பிறகு அந்தக் கப்பல் இந்தியாவிற்கு விருந்தினராக இல்லை என்றும், தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிடம் எந்த உதவியும் கோரவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Advertisement

பொற்காலம்

இந்தியா - ஐரோப்பா உறவில் பொற்காலம்

உலகில் நிலவும் இத்தகைய நிச்சயமற்ற சூழலில், இந்தியாவும் ஐரோப்பாவும் தங்களது உறவில் ஒரு பொற்காலத்தை எட்டியுள்ளதாகப் பிரதமர் மோடி குறிப்பிட்டார். சமீபத்தில் கையெழுத்தான இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் இந்தியா மற்றும் பின்லாந்து இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய நிறுவனங்களில் அவசர சீர்திருத்தங்கள் தேவை என்பதிலும் இரு நாடுகளும் உடன்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Advertisement