LOADING...
பீகாரில் NDA கூட்டணி அரசு வியாழக்கிழமை பதவியேற்கும்!
புதிய NDA அரசாங்கம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன

பீகாரில் NDA கூட்டணி அரசு வியாழக்கிழமை பதவியேற்கும்!

எழுதியவர் Venkatalakshmi V
Nov 17, 2025
09:05 am

செய்தி முன்னோட்டம்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் ஒரு புதிய NDA அரசாங்கம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்த இந்தியா டுடே வெளியிட்ட செய்தியின் படி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று காலை தனது இறுதிக் அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார். அந்தக் கூட்டத்தில், அமைச்சரவையைக் கலைப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நிதிஷ் குமார் பதவி விலக ஆளுநர் ஆரிப் முகமது கானிடம் பரிந்துரைக்கப்படுவார். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, நிதிஷ் குமார் ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பார். பின்னர் புதிய அரசை பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுப்பார்.

தேர்தல்

பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய NDA கூட்டணி

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், என்.டி.ஏ கூட்டணி 243 இடங்களில் 202 இடங்களை பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. குறிப்பாக பா.ஜ.க- 89 இடங்கள், ஐக்கிய ஜனதா தளம் (JD(U))- 85 இடங்கள்; LJP(RV) (சிராக் பாஸ்வான்)- 19 இடங்கள்; மற்ற சிறிய பங்காளிகள் (HAM & RLM)- 9 இடங்கள் பெற்றன. மறுபுறம் எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான மெகா கூட்டணி (Mahagathbandhan) 35 இடங்களை மட்டுமே வென்றது.

பதவியேற்பு

புதிய அரசு பதவியேற்பு

புதிய NDA அரசின் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வாய்ப்புள்ளது. அதிக எண்ணிக்கையிலான மக்களை அனுமதிக்கும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாட்னாவின் காந்தி மைதானத்தில் இந்த விழா நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அமைச்சரவையை விடக் கூடுதல் இடங்களைப் பிடித்துள்ளதால், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், புதிய அமைச்சரவையில் அதிக இடங்களைப் பெற முயற்சிப்பதாகத் தெரிகிறது. சிராக் பாஸ்வானின் LJP(RV) கட்சி துணை முதலமைச்சர் பதவியை குறிவைப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டணியின் முதலமைச்சர் யார் என்பது இன்னும் சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.