Loading...
பிரிக்ஸ் அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல! ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்திற்கு பிரதமர் மோடி 10 அம்ச வழிகாட்டல்
ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்திற்கு பிரதமர் மோடி 10 அம்ச வழிகாட்டல்

பிரிக்ஸ் அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல! ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்திற்கு பிரதமர் மோடி 10 அம்ச வழிகாட்டல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 12, 2026
04:12 pm

செய்தி முன்னோட்டம்

புதுடெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய நிர்வாக அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அதே வேளையில், பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பது எந்தவொரு குறிப்பிட்ட நாட்டிற்கும் அல்லது அமைப்பிற்கும் எதிரான கூட்டணி அல்ல என்பதை அவர் மேற்கத்திய நாடுகளுக்குத் தெளிவுபடக் கூறினார். சலுகைகளின் பிரமிட் (Pyramid of Privilege) என்ற தற்போதைய அதிகாரப் படிநிலையை மாற்றி, அனைத்து நாடுகளுக்கும் சம உரிமை அளிக்கும் கூட்டாண்மைக்கான தளம் (Platform of Partnership) என்பதாக சர்வதேச அமைப்புகள் மாற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

10 அம்சங்கள்

ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் மற்றும் 10 அம்ச பாதை

சர்வதேச அமைப்புகளை மறுசீரமைக்க 10 அம்ச வழிகாட்டல் திட்டத்தை பிரதமர் மோடி முறைப்படி முன்மொழிந்துள்ளார்.

பிரதிநிதித்துவம், பொறுப்புக்கூறல் மற்றும் விதிகளை உருவாக்குதல் ஆகிய மூன்று முக்கியத் தூண்களின் அடிப்படையில் இந்த வழிகாட்டல் திட்டம் அமைய வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நீண்டகாலமாகத் தள்ளிப்போடப்பட்டு வரும் சீர்திருத்தங்களை இனியும் தாமதிக்க முடியாது என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவுகளை எட்ட வேண்டும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

அவசரகால உதவி

மாலுமிகளுக்கான அவசரகால உதவி நெட்வொர்க்

ஹார்முஸ் ஜலசந்தி போன்ற சர்வதேச கடல்சார் வர்த்தகப் பாதைகளில் ஏற்பட்டு வரும் தற்காலிகப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, கடல்வழி வர்த்தகம் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தைப் பேசினார்.

வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளுக்கு அவசர காலத்தில் உதவிகளை வழங்க மாலுமிகள் அவசரகால ஆதரவு நெட்வொர்க் என்ற புதிய அமைப்பை உருவாக்க வேண்டும் எனப் பிரிக்ஸ் நாடுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

சுதந்திரமான கடல்சார் இயக்கத்திற்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

குளோபல் சவுத்

விதியை ஏற்கும் நிலையிலிருந்து விதியை உருவாக்கும் 'குளோபல் சவுத்'

செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் பயோடெக்னாலஜி போன்ற எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய தொழில்நுட்பத் துறைகளில் அனைத்து நாடுகளுக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என மோடி பேசினார்.

வளரும் நாடுகள் உள்ளடங்கிய குளோபல் சவுத் நாடுகள், சர்வதேச விதிகளை வெறும் ஏற்றுக்கொள்பவர்களாக மட்டும் இல்லாமல் தங்களின் குரலைப் பதிவு செய்து விதியை உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்காக பிரிக்ஸ் அமைப்பின் மூலம் இளம் தூதர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் தேவையான பயிற்சிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது.

ADVERTISEMENT