
விவேகானந்தர் நினைவிடத்தில் 45 மணி நேர தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
நேற்று மாலை கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் மோடி, விவேகானந்தர் நினைவிடத்தில் இன்று முதல் 45 மணி நேர தியானத்தில் ஈடுபடவுள்ளார்.
இந்தியாவில் கடந்த இரண்டு மாத காலமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர், தனது ஆன்மீக பயணத்தை தொடங்கியுள்ளார்.
விவேகானந்தர் பாறையில், பிரதமர் சூரிய வழிபடு செய்த புகைப்படங்களும், அங்கே உள்ள தியான மண்டபத்தில், காவி உடையில் பிரதமர் தியானத்தில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரி நகரம் மற்றும் விவேகானந்தா பாறையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.3,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள் சுற்றியுள்ள கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.
ஆன்மீக பயணம்
விவேகானந்தர் நினைவிடத்தில் பிரதமர் மோடியின் ஆன்மீக பயணம்
தியானத்தை தொடங்கும் முன், நேற்று குமரி கடற்கரையில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு பிரதமர் மோடி சென்றார்.
கன்னியாகுமரி தேவியை வழிபட்ட பிறகு, அவர் விவேகானந்தர் பாறைக்கு படகில் சென்றார்.
அங்கு அவர் தியானத்தைத் தொடங்குவதற்கு முன் சுவாமி விவேகானந்தரின் சிலை மற்றும் பரமஹம்சர் மற்றும் சாரதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தினார்.
தியானத்தின் போது, பிரதமர் மோடி மௌனம் காத்து, தியான மண்டபத்திற்குள் இருப்பார், இளநீர் மற்றும் பழ ஜூஸ் போன்ற திரவ உணவை மட்டுமே அவர் உட்கொள்வார்.
இதுபோன்ற ஆன்மீக தியானம் பிரதமர் மோடிக்கு முதல்முறை அல்ல.
2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளிலும், லோக்சபா தேர்தல் பிரச்சாரங்களின் முடிவில், முறையே பிரதாப்கர் மற்றும் கேதார்நாத்தில் இதேபோன்ற பயணங்களை மேற்கொண்டார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🔴LIVE : பிரதமர் மோடி தியானம் செய்யும் காட்சிகள் https://t.co/dj8JBqByXu
— Thanthi TV (@ThanthiTV) May 31, 2024
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Dinamani | விவேகானந்தர் பாறையில் சூரிய வழிபாடு செய்யும் மோடி | Dinamani
— தினமணி (@DinamaniDaily) May 31, 2024
Watch here:https://t.co/3ej7UE4x6B#PMModi #Kanniyakumari #VivekanandaMandapam #Bjp #Modi #VivekanandaMemorial #Narendramodi pic.twitter.com/fT141EuL5s