பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடக்கம்: 16 எதிர்க்கட்சிகள் சந்திப்பு
செய்தி முன்னோட்டம்
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வுக்கு முன்னதாக அரசாங்கத்தின் வியூகத்தை வகுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனது உயர்மட்ட அமைச்சர்களுடன் இன்று(மார் 13) ஆலோசனை நடத்தினார்.
இதே போல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்றத்தில் உள்ள கட்சியின் நாடாளுமன்றக் கட்சி(சிபிபி) அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கார்கே, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பட்ஜெட் கூட்டத்தொடருக்கான வியூகத்தை முடிவு செய்வதற்கு, இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
மேலும், காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கேவின் அலுவலகத்தில் 16 எதிர்க்கட்சிகள் இன்று சந்தித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்தியா
ஏப்ரல் 6 வரை தொடர்ந்து நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்
2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இன்று தொடங்குகிறது.
துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மானியங்களுக்கான கோரிக்கைகளை ஆய்வு செய்யவும், அவற்றின் அமைச்சகங்கள்/துறைகள் தொடர்பான அறிக்கைகளை உருவாக்கவும் இந்த இடைவேளை உதவியது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சகங்களின் மானியங்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவது மற்றும் மத்திய பட்ஜெட் நிறைவேற்றப்படுவதை மையமாகக் கொண்டுள்ளது.
இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 6 வரை தொடர்ந்து நடைபெறும். முதலாம் அமர்வு ஜனவரி 31 அன்று தொடங்கி பிப்ரவரி 13 அன்று முடிவடைந்தது.