Page Loader
மத்தியபிரதேசத்தில் நர்மதா ஆற்றில் நடந்து சென்ற மூதாட்டி - கடவுள் என நினைத்து வழிபட்ட மக்கள்
மத்தியபிரதேசத்தில் நர்மதா ஆற்றில் நடந்து சென்ற மூதாட்டி - கடவுள் என நினைத்து வழிபட்ட மக்கள்

மத்தியபிரதேசத்தில் நர்மதா ஆற்றில் நடந்து சென்ற மூதாட்டி - கடவுள் என நினைத்து வழிபட்ட மக்கள்

எழுதியவர் Nivetha P
Apr 10, 2023
06:24 pm

செய்தி முன்னோட்டம்

மத்தியப்பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள நர்மதாபுரத்தை சேர்ந்தவர் ஜோதி ரகுவன்ஷி. இவர் அங்குள்ள நர்மதா நதியில் நடந்து செல்வது போல் சில வீடியோக்கள் வெளியானதாக கூறப்படுகிறது. அந்த வீடியோக்கள் வைரலான நிலையில், ஆற்றில் தெய்வீக உருவம் தெரிகிறது என்ற வதந்தியும் பரவியது. இதனால் அப்பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டனர். தகவலறிந்து போலீசாரும் அப்பகுதிக்கு வந்தனர். இதற்கிடையே ஆற்றில் இருந்து ஜோதி ரகுவன்ஷி வெளியில் வந்துள்ளார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் அவரை தெய்வமாக வழிபட துவங்கி விட்டனர். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை விசாரித்துள்ளார்கள். அந்த விசாரணையில் ஜோதி ரகுவன்ஷி 10 மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியவர் என்பது தெரியவந்துள்ளது.

மூதாட்டி விளக்கம்

வேண்டுதல் காரணமாக ஆற்றினை சுற்றிவந்த மூதாட்டி

மேலும் அவரிடம் பேசுகையில், அவர் தனது வேண்டுதலுக்காக தான் ஆற்றினை சுற்றி வந்துள்ளார் என்றும், ஆற்றில் சில இடங்களில் தண்ணீர் குறைந்து காணப்பட்டதால் அவர் அதில் இறங்கி நடந்து சென்றுள்ளார் என்றும் தெரிகிறது. சில இடங்களில் அவர் நீந்தியும் சென்றுள்ளார். அதோடு அவர் ஆற்றங்கரையோரத்தில் நடந்து செல்கையில் தேவைப்படுவோருக்கு நாட்டு மருந்துகளையும் கொடுத்துள்ளார். இது தான் இணையத்தில் வீடியோவாக வைரலானது. அதில் பார்க்கும் பொழுது, அந்த மூதாட்டி நதியின் மேல் நடப்பது போல் தெரிந்துள்ளது. இது குறித்து அந்த மூதாட்டி கூறுகையில், நான் தண்ணீர் மேல் நடக்கவும் இல்லை, நான் பெண் தெய்வமும் இல்லை. எனது வேண்டுதல் காரணமாகவே நான் ஆற்றை சுற்றி வருகிறேன் என்று விளக்கமளித்தார்.