Page Loader
எங்களை போன்ற திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை - தமிழிசை செளந்தரராஜன்
எங்களை போன்ற திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை - தமிழிசை சவுந்தரராஜன்

எங்களை போன்ற திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை - தமிழிசை செளந்தரராஜன்

எழுதியவர் Nivetha P
Feb 21, 2023
01:39 pm

செய்தி முன்னோட்டம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் அண்மையில் கோவைக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மாநில ஆளுநராக நியமிக்கப்படுபவர்கள் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரால் பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே குடியரசு தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழக மக்கள் எங்களை போன்ற திறமையானவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்க முடியவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். எனவே, மத்திய அரசு திறமையான நல்லவர்களை அடையாளம் கண்டு ஆளுநராக நியமனம் செய்து வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

தமிழிசை சவுந்தரராஜன்

வடஇந்தியாவில் இருந்து வருவோருக்கு யார் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பதை சிந்தனை செய்யவேண்டும்

தொடர்ந்து பேசிய அவர், தமிழக மக்கள் தயவு செய்து நல்லவர்களை அடையாளம் கண்டுகொண்டு செயல்படுங்கள். எங்களை போன்றோர்கள் நிர்வாக திறமை உள்ளவர்கள். அதே போல் மக்கள் திறமையானவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் பேசிய அவர், பணியாளர்கள் வட இந்தியாவில் இருந்து இங்கு வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு யார் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பதனை சிந்தனை செய்தல் வேண்டும். தமிழகத்தில் சட்டஒழுங்கு குறித்த விவரங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். தான் ஒரு ஆளுநர் என்பதால் இது தொடர்பாக கருத்து எதுவும் கூற முடியாது என்று அவர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.