Page Loader
தமிழகத்தில் மின்சார கணக்கெடுப்பு தாமதமாவதால் பாதிக்கப்படும் மக்கள்-அதிக கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம்
தமிழகத்தில் மின்சார கணக்கெடுப்பு தாமதமாவதால் பாதிக்கப்படும் மக்கள்-அதிக கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம்

தமிழகத்தில் மின்சார கணக்கெடுப்பு தாமதமாவதால் பாதிக்கப்படும் மக்கள்-அதிக கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம்

எழுதியவர் Nivetha P
Feb 07, 2023
01:31 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2022ம்ஆண்டு செப்டம்பர் 10ம்தேதி முதல் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. அதன்படி, குறிப்பிட்டதேதியில் சரியாக மின்பயன்பாட்டிற்கான கணக்கெடுப்பினை எடுத்துவிட வேண்டும் என்று ஊழியர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவும் இட்டது. ஆனால் எப்பொழுதும்போல ஊழியர்கள் தாமதமாக கணக்கெடுக்க செல்வதால், குறைந்த மின்சாரத்தை உபயோகிக்கும் வீடுகளிலும் 100 யூனிட் இலவசம், 500யூனிட் வரை மானிய சலுகை கிடைக்காத நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிரிவு அலுவலக உதவி பொறியாளர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுகிறது. மேலும் கணக்கெடுப்பிற்கு நேரில் செல்லாமல், முந்தைய பயன்பாட்டைப்பார்த்து கணக்கெடுத்து கொள்வது, அதிகம் மின்சாரத்தை உபயோகிப்போருக்கு குறைத்து கணக்கெடுப்பது போன்ற தவறுகளும் அதிகம் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

அதிகரிக்கும் புகார்கள்

ஊழியர்கள் செய்யும் காலதாமதத்தால் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் பொது மக்கள்

எனவே, மின்வாரிய தலைமை அதிகாரிகள் பிரிவு தினமும் பிரிவு அலுவலகத்திற்கு சென்று மின் கணக்கெடுப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது. இதன்மூலம் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதோடு மின் வாரியத்திற்கும் இழப்பு ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. மேலும் நேரில் சென்று ஊழியர்கள் கணக்கெடுக்காமல் அவர்களுக்கு வேண்டியவர்களை அனுப்பி கணக்கெடுக்க சொல்வதாகவும், இதற்காக அவர்களுக்கு தினமும் ரூ.250கொடுக்கப்படுவதாகவும் புகார்கள் எழுகிறது. முன்னதாக, கணக்கெடுப்பு செய்த 20நாட்களுக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும் என்னும் விதிமுறை உள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள். ஏனெனில் கணக்கெடுப்பில் ஏற்படும் கால தாமதத்தால் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்டுகிறது என்று நாகர்கோயில் எம்.எல்.ஏ.,தளவாய் சுந்தரம் அண்மையில் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.