Page Loader
இன்று தொடங்குகிறது 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்

இன்று தொடங்குகிறது 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்

எழுதியவர் Sindhuja SM
Jun 24, 2024
09:58 am

செய்தி முன்னோட்டம்

18வது மக்களவையின் முதல் அமர்வு இன்று தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் பதவியேற்க உள்ளனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்ட பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ள இருக்கிறார். மேலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று பிரதமர் மோடியையும் சபை உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 280 எம்பிக்கள் இன்றும், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட 264 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளையும் பதவியேற்க உள்ளனர்.

இந்தியா 

மக்களவை சபாநாயகர் பதவியால் ஏற்பட்ட பிரச்சனை 

பொதுவாக சபாநாயகர் பதவி நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினருக்குச் செல்லும் என்பதால், பர்த்ருஹரி மஹ்தாப் என்பர் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டதற்கு ஏற்கனவே பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. 7 முறை எம்.பி.யாக இருந்தவர பர்த்ருஹரி மஹ்தாப் ஆவார். தலித் தலைவரும், கேரளாவில் இருந்து 8 முறை எம்.பி.யாக வென்றவருமான கொடிக்குன்னில் சுரேஷ் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவார் என்று காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால், அது நடக்கவில்லை. எனவே, மஹ்தாப் நியமனம் தொடர்பாக காங்கிரஸ் பாஜகவை விமர்சித்துள்ளது. மக்களவை சபாநாயகர் ஜூன் 26ம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார். புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, மக்களவையின் முதல் சில அமர்வுகளுக்கு இடைக்கால சபாநாயகர் தலைமை தாங்கி, புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தலை நடத்த உள்ளார்.