Page Loader
திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா
திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா

திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா

எழுதியவர் Nivetha P
Feb 17, 2023
04:58 pm

செய்தி முன்னோட்டம்

முருகரின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் எச்.சி.எல். நிறுவனமும் இணைந்து ரூ. 300 கோடி செலவில் கோயில் வளாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவினை நடத்துவதற்கான திருப்பணிகள் நேற்று(பிப்.,16) துவங்கப்பட்டது. அதன் பேரில் முதல்கட்டமாக கோயில் கிழக்கு கோபுரம் மற்றும் சண்முகவிலாச மண்டப நுழைவுவாயிலில் சாலகோபுரம் ஆகியவற்றில் திருப்பணிகள் துவங்கியது. இதற்கான பாலாலயம் மற்றும் பந்தல்கால் நடும் விழா நேற்று காலை நடந்தது. இதனையடுத்து அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டது.

கும்பநீர் கொண்டு கும்பாபிஷேகம்

பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமானத்தளத்திற்கு கொண்டு சென்று பந்தல்கால் நடப்பட்டது

இதனை தொடர்ந்து, காலை 8 மணியளவில் உள்பிரகாரத்தில் உள்ள யாகசாலையில் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கேயே பந்தல்கால் நடப்பட்டது. அதன் பின்னர் மரகோபுர சிற்பங்களுக்கு பூஜையில் வைக்கப்பட்டிருந்த கும்ப நீரால் பாலஸ்தாபன கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் அறநிலையத்துறை இணை ஆணையர், கோயில் இணை ஆணையர், அறங்காவலர், துணை ஆணையர் மற்றும் எச்.சி.எல். நிறுவனத்தின் சார்பிலும் முக்கியமான நபர்கள் பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.